‘பிகில்’ படத்தை விட அதிகமாக நடந்துள்ள வியாபாரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவதற்குள்ளாகவே படத்தின் வியாபாரம் முடிவடைந்துவிட்டது.

தமிழ்நாடு வினியோகஸ்தர்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வெளிநாட்டு வினியோகஸ்தர்கள் என அனைவரின் தகவலையும் படத்தை வெளியிடும் நிறுவனம் அறிவித்துள்ளது.

‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் மாதம் தான் வெளியாக உள்ளது. ஆனால், அதற்குள்ளாக வியாபாரம் முடிவடைந்துள்ளது திரையுலகத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘பிகில்’ படம் சுமார் 300 கோடி வரை வசூலித்தாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன. அதனால், ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாரம், ‘பிகில்’ படத்தை விட அதிகமாக நடந்துள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*