விருது கிடைக்காத விரக்தியில் ஷான் ரோல்டன்

2019ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு விருதுகள் வழங்கும் விழாக்கள் கடந்த இரண்டு வாரங்களாகவே நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய பலருக்கும் அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் விருதுகள் வழங்கும் கமிட்டி குறித்து ஒரு சர்ச்சைப் பதிவொன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், “மெஹந்தி சர்க்கஸ்’ படம் முக்கிய விருதுகளுக்காக நாமினேட் செய்யப்படவில்லை. விருது கமிட்டிகளை விட இசை ரசிகர்கள் நல்ல ரசனை உள்ளவர்களாக இருக்கிறார்கள்,” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*