திரெளபதி பட இயக்குனருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா- பெரும் பரபரப்பு

சமீபத்தில் வெளியான ’திரெளபதி’ பட ட்ரெய்லர் எந்த அளவு சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக இன்னொரு தரப்பினர் கேலியும் கிண்டலும் செய்ததால் சமூக வலைதளங்களில் ஒரு சமுதாய போரே நடந்தது.

இது குறித்து இயக்குனர் ஜி.மோகன் அவ்வப்போது விளக்கம் அளித்த போதிலும் இந்த விவாதங்கள் முற்றுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல் ’திரெளபதி’ படத்திற்கு தல அஜித் வாழ்த்து தெரிவித்ததாகவும், அஜித்தும் இயக்குனர் மோகனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டதாகவும், ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது.

இதனை உறுதி செய்யும் வகையில் அஜீத், ஜி.மோகன் இணைந்து எடுத்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஜி.மோகன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது வதந்திகளை நம்பாதீர்.. திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே’ என்று கூறியுள்ளார். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*