பொலிவூட்டில் கீர்த்தி சுரேஷின் இடத்தில் பருத்திவீரன் பட நடிகை!

சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் அவதானமாக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அஜய் தேவ்கான் நடிப்பில், ‘Maidaan’ என்கிற பெயரில் உருவாகும் இந்த படத்தில், அஜய் தேவ்கனுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

எனினும் குறித்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் உரிய காலத்தில் ஆரம்பிக்கப்படாமையின் காரணமாக அதிலிருந்து தற்போது விலகியுள்ளார்.

தற்போது இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகிய வேகத்தில், பருத்தி வீரன் பட நடிகை ‘பிரியாமணி’ அஜய் தேவ்கனுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*