சினிமாவிற்கு சென்சார் அவசியமில்லை – எஸ்.வி.சேகர்

சினிமாவிற்கு சென்சார் தேவை இல்லை என்று நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகரான எஸ்.வி.சேகர் பட விழாவில் தெரிவித்துள்ளார்.

அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான்.

இந்த படத்தை ரொம்ப பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன்.
சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேற ஓவர் நம்பிக்கை வேற.

சரியான நேரத்தில் படத்தை வெளியீடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள்.

அதனால், இப்படத்தை அப்படி சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*