வரி ஏய்ப்பு புகார் – தெலுங்கின் முன்னணி நடிகை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகாவை வரி ஏய்ப்பு புகார் காரணமாக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஷ்மிகா வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நடவடிக்கையை தொடர்ந்து அவரை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா வரி ஏய்ப்பு செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது நடிகை ராஷ்மிகா படப்பிடிப்புக்காக சென்னை சென்று இருந்தார்.

பின்னர் அதிகாரிகள் ராஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான விசாரணைக்கு பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ராஷ்மிகாவும், அவருடைய பெற்றோரும் விரைவில் வந்து ஆஜராகுமாறு உத்தரவிட்டப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*