மீடூ இல் சிக்காமை எனது அதிஷ்டம் – தமன்னா தெரிவிப்பு

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில்,

” எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை.

மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிஷ்டம்.

பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும்.

மீ டூவில் புகார் கூறியவர்களுக்கு பட வாய்ப்புகள் வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

நான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை. சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவேன். 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*