சந்தானத்தின் கம கம சமையல்

மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே, நடிகர் சந்தானம் நடித்திருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ குறித்த அறிவிப்பு வெளியாகி படமும் தயாரானது.

இரு வருடங்களுக்கு முன்னதாகவே படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியானது. இருந்தாலும், பல முறை வெளியீடு திகதி அறிவிக்கப்பட்டும், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.

இந்தநிலையில் வரும் ஜனவரி 31ல், ‘சர்வர் சுந்தரம்’படம் வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவான சர்வர் சுந்தரம் படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக சக்கப்போடு போடு ராஜா, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களில் நடித்த வைபவி நடித்துள்ளார். இந்தப் படத்தில், கிரண், மாயா கிருஷ்ணன், ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*