10 நாளில் 100 கோடி வசூல் ?

ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு மற்றும் பலர் நடித்த தர்பார் படம் கடந்த வாரம் ஜனவரி 9ம் திகதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

அவ்வளவு தியேட்டர்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தால் நான்கு அல்லது ஐந்து நாட்களில் 100 கோடி வசூலைத் தாண்டியிருக்கும். ஆனால், ஒரு சாதாரண நாளில் படத்தை வெளியிட்டு அந்த 100 கோடி வசூலை எட்டிப் பிடிக்க முடியாதபடி செய்துவிட்டார்கள்.

இருந்தாலும் படம் வெளியான நாள், அதற்கடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமை, பொங்கல் விடுமுறை என வசூல் சிறப்பாக அமைந்தது. நேற்றுடன் முடிவடைந்த 10 நாட்களில் தர்பார் படம் சுமார் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

நமக்குக் கிடைத்த வசூல் நிலவரங்களின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் தர்பார் படம் பெற்ற வசூல்…

முதல் நாள் – 15.8 கோடி

இரண்டாம் நாள் – 8.6

மூன்றாம் நாள் – 9.6

நான்காம் நாள் – 14

ஐந்தாம் நாள் – 8

ஆறாம் நாள் – 8.8

ஏழாம் நாள் – 13.8

எட்டாம் நாள் – 11

ஒன்பதாம் நாள் – 8.5

பத்தாம் நாள் – 9 கோடி

மொத்த வசூல் – 107.1 கோடி

தர்பார் படத்தின் தமிழ்நாட்டு வியாபாரம் சுமார் 60 கோடி வரை நடைபெற்றது. தற்போது 107 கோடி வசூல் கடந்துள்ள நிலையில் இனி அனைவருக்குமான லாபத் தொகை கிடைத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*