தள்ளிப்போன அமலாபால் படம்

அமலாபால் சோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் படம் ‛அதோ அந்த பறவை போல’. அவருடன் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஆர்.வினோத் என்கிற புதுமுகம் இயக்கி உள்ளார்.

அடர்ந்த காட்டுக்குள் வழி தவறி மாட்டிக்கொண்ட ஒரு இளம்பெண், எப்படி எதிர்நீச்சல் போட்டு தப்பி வருகிறாள் என்பதுதான் கதை. அமலாபால் நிஜமாகவே இயற்கை ஆர்வலர், சாதனை பிரியர் என்பதால் அடர்ந்த காட்டுக்குள் தங்கி இருந்து நடித்த படம். இந்த படத்தின் வெளியீட்டை அவர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

படத்தின் பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டே முடிந்து விட்டது. நாளை படம் வெளிவருதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது படம் தேதி குறிப்பிடப்படால் தள்ளிப்போகிறது. தயாரிப்பாளரின் பைனான்ஸ் பிரச்சினையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நாளை வெளிவருவதாக இருந்த சர்வர் சுந்தரம் படமும் தள்ளிப்போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*