மீண்டும் அனிருத் இசையில் பாடினார் விஜய்

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‛மாஸ்டர். அனிருத் இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், அழகம் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் ‛செல்பி புள்ள பாடலை பாடிய விஜய், மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை” என தொடங்கும் பாடலை பாடி உள்ளார். நாளை மாலை மாலை 5 மணிக்கு இந்த பாடல் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*