ஜிஎஸ்டி செலுத்துமாறு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்

“திரைப்படங்களுக்கு இசை அமைப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி வரி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: திரைப்படங்களுக்கு இசை அமைப்பது தயாரிப்பாளர்களுடன் செய்யும் ஒப்பந்தத்தின் அடிப்படையானது. இந்த இசைக்கான காப்புரிமை தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இசையின் முழு உரிமையாளரும் தயாரிப்பாளர்கள் தான். நிரந்தரமாக இசையை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவது சேவையாகாது. தற்காலிகமாக காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு சேவை வரியிலிருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.

இசையை திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்காக கம்போஸ் செய்யும் இசையமைப்பாளர்களுக்கு ராயல்டி தொகை எதுவும் தரப்படுவதில்லை. அந்த வகையில் இசையை விற்பனை செய்யவில்லை.

ஜி.எஸ்.டி வரி ஆணையர் இசை பணியை தவறாக புரிந்துகொண்டு சேவை வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை தொடர்ந்து ஜி.எஸ்.டி. ஆணையரின் நோட்டீசுக்கு மார்ச் 4ம் திகதி வரை இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*