பிக்பாஸ் புகழ் லொஸ்லியா ஒப்பந்தம்!

சந்திரா மீடியா விஷன்ஸ் எஸ்.எஸ்.திருமுருகன் தயாரிக்கும் படத்தில் ஆரி அருஜுனா ஹீரோவாக நடிக்கிறார். உடன் நடிக்க பிக்பாஸ் புகழ் லொஸ்லியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இவர்களுடன் ஸ்ருஷ்டி டாங்கே, பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் நடிக்கிறார்கள்.

படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். அறிமுக இயக்குனர் ஆல்பர்ட் ராஜ் இயக்குகிறார்.

ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என்று மாற்றிய பிறகு நடிக்கும் முதல் படம்.

இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*