தனுஷ் இயக்கத்தில் நடிக்க சம்மதிப்பாரா கவுண்டமணி ?

தமிழ்த் திரையுலகில் உள்ள நடிகர்களில் பலரும் நகைச்சுவை கவுண்டமணிக்கு ரசிகர்கள் தான். நடிகர் தனுஷ், தன்னை எப்போது கவுண்டமணியின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதும் உண்டு.

‘ப பாண்டி’ படத்திற்குப் பிறகு, ராஜ்கிரண், கவுண்டமணி ஆகியோரை நடிக்க வைத்து ‘ப பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் இயக்க ஆசைப்படுகிறாராம். அது பற்றிய தகவலை தனுஷின் நெருக்கமான இயக்குனர்களில் ஒருவரான சுப்பிரமணிய சிவா தெரிவித்துள்ளார்.

கவுண்டமனி சினிமாவில் நடித்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் கடைசியாக நடித்த ‘வாய்மை’ படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது.

தனுஷின் ஆசையை கவுண்டமணி நிறைவேற்றுவாரா என்பது பெரிய கேள்விதான். சினிமாவில் நடிக்காமல் கடந்த சில வருடங்களாகவே ஒதுங்கி இருக்கிறார் கவுண்டமணி. அவரை சம்மதிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*