மீண்டும் போஸ்டர் ஒட்ட ஆசைப்படும் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் 2013ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. அந்தப் படம் வெளிவந்த போது படத்தை போஸ்டர் ஒட்டி சரியான முறையில் விளம்பரப்படுத்த பணம் இல்லாததால் படத்தின் இயக்குனரான மிஷ்கினே, தெருத் தெருவாகச் சென்று போஸ்டர் ஒட்டினார்.

அதுபோன்று இப்போது மீண்டும் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்ற ஆர்வம் மிஷ்கினுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழில் சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான விருது பெற்ற ‘பாரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய மிஷ்கின், “இயக்குனர்கள் ராம், வெற்றிமாறன் இந்தப் படத்தைப் பார்க்க என்னை அழைத்தார்கள். நானும் வழக்கமான ஆர்ட் படத்தைத்தான் பார்க்கப் போகிறோம் என நினைத்து வந்தேன். ஆனால், படம் மிகவும் யதார்த்தமாகயும், எளிமையாகவும் அமைந்து என்னைக் கவர்ந்தது. இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் பெற்றோர் மீதான் உங்களது அன்பு அதிகமாகும். ‘பேரன்பு, அசுரன், சைக்கோ’ படம் ஆகியவற்றை விட ‘பாரம்’ பெரிய படம்.

தமிழ்நாட்டில் இந்தப் படத்திற்காக நான் போஸ்டர் ஒட்டப் போகிறேன். எனக்கும், ராமுக்கும் வேலையில்லை. அதனால் சாலை வழியே பயணம் செய்து போஸ்டர் ஒட்டுவதை செய்வோம். வெற்றி இதற்காக நீங்கள் உதவ வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*