நான்கு மொழிப்படத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்

மேயாதமான், கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து இந்தியன்-2, மாபியா, குறுதி ஆட்டம், கசட தபற, வான் என பல படங்களில் ஓய்வின்றி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தெலுங்கிலும் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நடிக்கும் அகம் பிரமாஸ்மி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிப்பதை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*