சாதாரண நிலைக்கு மாறியுள்ளார் – பார்வதி

மலையாள திரையுலகில் மிக திறமையான நடிகை என பெயர் பெற்றவர் நடிகை பார்வதி. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இவர் மலையாள திரையுலகில், குறிப்பாக நடிகர் சங்கத்திற்கு எதிராக ஆவேசமான பெண்ணிய கருத்துக்களை கூறிக்கொண்டு போர்க்கொடி தூக்கி வந்தார்.

இதனாலேயே எதற்கு வம்பு என இவரை தேடி வந்த பட வாய்ப்புகளும் இவரை விட்டு ஒதுங்கி சென்றன. தற்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே வைத்துள்ள பார்வதி சமீப நாட்களாக தனது தீவிர முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு சாதாரண நிலைக்கு மாறியுள்ளார் என்று தெரிகிறது.

கடந்த சில நாட்களாக சில திரைப்பட விருது விழாக்களில் இவர் கலந்து கொண்டபோது இதை கண்கூடாகவே காண முடிந்தது. அதுமட்டுமல்ல முன்பெல்லாம் தனது உடையில் அதிக கவனம் செலுத்தாத பார்வதி சமீபத்தில் புதுவிதமான டிசைனிங் உடைகளை அணிந்துகொண்டு விதவிதமாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*