நிவின்பாலி படத்தில் இணைந்தார் மஞ்சு வாரியர்

நிவின்பாலி தற்போது மலையாளத்தில் நடித்து வரும் படம் ‘படவேட்டு’. அறிமுக இயக்குனர் லிஜு கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார். அருவி புகழ் அதிதி பாலன் இந்த படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவரும் நிலையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை மஞ்சுவாரியார் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

கதாநாயகி அதிதி பாலனை விட முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் தான் மஞ்சு வாரியர் நடிக்கிறாராம். இந்த படத்தை பிரபல மலையாள நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார். இது அவரது முதல் தயாரிப்பு என்பதும் கடந்த வருடம் வெளியான காயங்குளம் கொச்சுன்னி என்கிற படத்தில் நிவின்பாலியும் சன்னி வெய்னும் ஹீரோ, வில்லனாக நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*