மீண்டும் நடிக்க வந்த திண்டுக்கல் ஐ.லியோனி

1997 அருண்விஜய், வடிவேலு நடித்த கங்கா கெளரி படத்தில் அவர்களின் அப்பாவாக நடித்தவர் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி.

அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்காத அவர் தற்போது ஆலம்பனா என்ற படத்தில் ஒரு தாத்தா வேடத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், கங்கா கெளரி படத்திற்கு பிறகு இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் தாத்தா வேடம் என்பதால் சில காட்சிகளில் என்னை சோகமாக நடிக்க வைத்துள்ளனர். ஆனால் மேடைகளில் கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்து வரும் என்னால் சோகமாக நடிப்பதற்கு ரொம்ப சிரமமாக இருந்தது. கிளிசரின் போட்டும் வேதனை வரவில்லை.

அந்த ஒரு காட்சிக்காக ஒரு மணி நேரம் போராடினேன். அதன்பிறகு குடும்பத்தில் நடந்த ஏதாவது ஒரு பிரச்சினை மனதில் நினைத்துக்கொண்டு நடியுங்கள் என்று டைரக்டர் சொன்ன பிறகுதான் என் முகத்தில் வேதனை கலந்த சோகம் எட்டிப்பார்த்தது. அந்தவகையில், இந்த படத்தில் நடித்தது நடிகர்களின் கஷ்டத்தை தெரிந்து கொள்ள எனக்கு ஒரு

வாய்ப்பாகவும் அமைந்தது என்கிறார் திண்டுக்கல் ஐ.லியோனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*