விஜய்யின் ஒரு குட்டிக்கதை பாடலை பாராட்டிய சிம்பு

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டிக்கதை என்ற பாடல் கடந்த காதலர் தினத்தில் வெளியாகி இரண்டே நாளில் 1 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். பலரும் பாராட்டி வரும் இந்த பாடலை சிம்புவும் தற்போது பாராட்டியுள்ளார். அதையடுத்து ஒரு குட்டிக்கதை பாடலை எழுதிய அருண் ராஜா காமராஜ் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாசிட்டிவிட்டியை கூறும் குட்டிக்கதையை அதனை கடைபிடித்து வரும் சிம்பு பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பாராட்டுக்கு எங்களது மிகப்பெரிய நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*