விபத்தில் இறந்த ரசிகரின் குடும்பத்துக்கு விஜய் நிதியுதவி

விஜய்யின் வளர்ச்சிக்கு அவரது ரசிகர்கள் பெரும் பலமாக இருந்து வருகிறார்கள். அவர் படங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு அப்டேட் வெளியானாலும் உடனே அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி படத்திற்கு விளம்பரம் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைசேர்ந்த முருகன் என்ற விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி சமீபத்தில் விபத்தில் மரணமடைந்து விட்டார்.

அதையடுத்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வறுமையில் வாடிக்கொண்டிருப்பதாக விஜய் ரசிகர் மன்றத்தினர் மூலம் நடிகர் விஜய்க்கு தகவல் கிடைத்துள்ளது.

அதையடுத்து அந்த ரசிகரின் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார் விஜய். அதை முருகனின் மனைவியிடம் விஜய் ரசிகர் மன்றத்தினர் வழங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*