மாபியா-வை முந்துமா மற்ற படங்கள்?

2020 பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நாளை 21ம் திகதி  “பாரம், காட்பாதர், கன்னி மாடம், குட்டி தேவதை, மாபியா, மீண்டும் ஒரு மரியாதை” ஆகிய 6 படங்கள் வெளியாகின்றன.

இதில் ‘மாபியா’ படத்திற்கு மட்டும்தான் ஓரளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது. ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரும் அடுத்த படம் இது. அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

2018ம் ஆண்டிற்கான தமிழில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்ற ‘பாரம்’ படத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவரது நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்.

பாரதிராஜா கதாநாயகனாக நடித்துள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’ படம் நாளை வெளியாகிறது. ‘காட் பாதர்’ படத்தில் நட்டி நாயகனாக நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘கன்னி மாடம்’. இவற்றுடன் ‘குட்டி தேவதை’ என்ற படமும் வெளிவருகிறது.

இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் இதுவரை வெளிவந்துள்ள படங்களில் எதுவும் பெரிய படமாக அமையவில்லை. குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெறவில்லை என்பது வருத்தமான ஒன்று. இந்த வாரமும், அடுத்த வாரமும் வெளிவரும் படங்களாவது அதை மாற்றியமைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*