சிவகார்த்திகேயன் ஜோடி ஆன பிரியங்கா அருள் மோகன்

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்து இயக்கும் படம் ‛டாக்டர்’. சிவகார்த்திகேயன் தயாரித்து, நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பவர் பிரியங்கா அருள் மோகன்.

இவர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒன்ந்த் கத ஹெல்ல என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் கேங் லீடர் படத்தில் நானி ஜோடியாக அறிமுகமானார். அடுத்து மாயன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜே.ராஜேஷ் கண்ணன் இயக்கும் இந்தப் படம் தயாரிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*