வில்லனாக நடிப்பது ஏன்? பிரசன்னா விளக்கம்

ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக இருந்த பிரசன்னா, ஹீரோ வாய்ப்புகள் குறையவே வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அஞ்சாதே, திருட்டு பயலே 2வில் படத்தில் வில்லனாக நடித்த அவர், துப்பறிவாளன் படத்தில் விஷால் உடன் பயணிக்கும் முக்கிய வேடத்தில் நடித்தார். இவர் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனாக நடித்துள்ள மாபியா படம் நாளை வெளிவருகிறது.

வில்லனாக நடிப்பது பற்றி பிரசன்னா கூறியதாவது: வில்லன் கேரக்டர்களை நான் தேடிச் செல்வதில்லை. சில நெகட்டிவ் கேரக்டர்களுக்கு நான் பொருத்தமாக இருப்பதாக இயக்குனர்கள் நினைக்கிறார்கள். அப்போதும் எனக்கு கதையும், கேரக்டரும் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். ஆனாலும் அஞ்சாதே படத்திற்கு பிறகு நான் வில்லனாக நடித்த படங்களை விட ஹீரோவாக நடித்த படங்கள் தான் அதிகம்.

இப்போது வில்லன் நடிகர் என்று தனியாக யாரும் கிடையாது. நெகட்டிவ் கேரக்டரில் ரஜினி, விஜய், அஜித் கூட நடிக்கிறார்கள். இப்போது கதைதான் ஹீரோ, வில்லன், எல்லாம். சில படங்களில் வில்லன்களே இருப்பதில்லை. கதையில் வரும் சூழ்நிலைகளே வில்லனாக இருக்கிறது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*