அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்

தொலைக்காட்சிகளில் தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் குழந்தைகளுக்கு பிடித்தமான மாயாஜால தொடர்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர். முன்னணி சேனலில் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற தொடர் ஞாயிறு காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதை தொடர்ந்து விஜய் டி.வியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்.

இது இந்தியில் பிரபலமான தொடர். தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள். ஹீரோ அமன் பெரிய ஜமீன் குடும்பத்து வாரிசு. அவன் எது கேட்டாலும் செய்து கொடுக்கும் பூதம் ஒன்று அவனது நண்பனாக இருக்கிறது. உலகிலேயே அழகான பெண், என் மனைவியாக கிடைக்க வேண்டும் என்று கேட்கிறான். பூதம் அடையாளம் காட்டும் பெண் ரோஷினி. தேவதை போன்ற அழகை கொண்டவள். பூதத்தின் துணையோடு அவள் மனதில் இடம்பிடித்து எப்படி மணக்கிறான் என்பதுதான் தொடரின் கதை. மாயாஜால காட்சிகள் நிறைந்த தொடர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*