தெலுங்கில் கால் பதிக்கும் பிரியா பவானி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், மேயாதமான் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்போது ‛‛இந்தியன் 2, களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், கசடதபற” உள்பட 8 படங்களில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள மாபியா நாளை வெளிவருகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் அறிமுகமாகிறார் பிரியா. ஸ்ரீகாந்த ரெட்டி என்ற புதுமுகம் இயக்கும் அகம் பிரம்மாஸ்மி படத்தில் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருதால் திருமணத்தை தள்ளி வைத்து விட்டு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*