சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய்

கடந்த ஆண்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகி அருண் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது ‘தடம்’. மாறுபட்ட இரண்டு வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அருண் விஜய். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திற்கு தெலுங்கிலும், இந்தியிலும் ரீமேக் உரிமைக்கு மிகப்பெரிய போட்டி ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்க, கிஷோர் திருமலா என்பவர் இந்த படத்தை ரெட் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.

இன்னொரு பக்கம் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனரான வர்தன் கெட்கர் இயக்கும் இந்த படம், மே மாதம் துவங்க உள்ளது. தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியை இந்தியில் கபீர்சிங் ஆக ரீமேக் செய்த தயாரிப்பாளர்கள் தான் இந்தப் படத்தையும் இந்தியில் தயாரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*