2019 – முதன்மை 10 பட முன்னோட்டம்கள் எவை தெரியுமா?

ஒரு படத்திற்கு ரசிகர்களிடம், வினியோகஸ்தர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை தீர்மானிக்கும் ஒரு விஷயமாக படங்களின் டிரைலர்கள், டீசர்கள் அமைகின்றன. யு-டியூப்பை திரையுலகினர் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு அதில் வெளியாகும் திரைப்படம் சம்பந்தமான அனைத்து வீடியோக்களும் அந்தப் படத்தின் வியாபாரத்திற்கு பேருதவி புரிகின்றன.

அதற்குக் கிடைக்கும் பார்வைகள், லைக்குகள் ரசிகர்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. சில சமயம் ரசிகர்களிடையே அது மோதலையும் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டிலும் இந்த டிரைலர்கள், டீசர்களுக்கான பார்வைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 2019ல் அவை புதிய சாதனைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

தமிழில் 2019ல் வெளியான புதிய படங்களின் டிரைலர்கள், டீசர்கள் ஆகியவற்றில் எது அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்து டாப் 10 பட்டியலைத் தேர்வு செய்துள்ளோம்.

1.பிகில்

நடிப்பு – விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப்
இயக்கம் – அட்லி
இசை – எஆர் ரகுமான்
வெளியான தேதி – 25 அக்டோபர் 2019
டிரைலர் வெளியான தேதி – 12 அக்டோபர் 2019
பார்வைகள் – 4.9 கோடி
லைக்குகள் – 23 லட்சம்

2.பேட்ட

நடிப்பு – ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா
இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்
இசை – அனிருத்
வெளியான தேதி – 10 ஜனவரி 2019
டிரைலர் வெளியான தேதி – 27 டிசம்பர் 2018
பார்வைகள் – 2.7 கோடி
லைக்குகள் – 7.19 லட்சம்

3.விஸ்வாசம்

நடிப்பு – அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு மற்றும் பலர்
இயக்கம் – சிவா
இசை – இமான்
வெளியான தேதி – 10 ஜனவரி 2019
டிரைலர் வெளியான தேதி – 30 டிசம்பர் 2019
பார்வைகள் – 3.2 கோடி
லைக்குகள் – 13 லட்சம்

4.காஞ்சனா 3

நடிப்பு – ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி
இயக்கம் – ராகவா லாரன்ஸ்
இசை – தமன், டூபாடு
வெளியான தேதி – 19 ஏப்ரல் 2019
டிரைலர் வெளியான தேதி – 27 மார்ச் 2019
பார்வைகள் – 2.9 கோடி
லைக்குகள் – 3.6 லட்சம்

5. 90 எம்எல்

நடிப்பு – ஓவியா, மசூம் சங்கர், பொம்மு, மோனிஷா, ஸ்ரீகோபிகா
இயக்கம் – அழகிய அசுரா
இசை – சிம்பு
வெளியான தேதி – மார்ச் 1, 2019
டிரைலர் வெளியான தேதி – 8 பிப்ரவரி 2019
பார்வைகள் – 1.73 கோடி
லைக்குகள் – 1.35 லட்சம்

6. நேர்கொண்ட பார்வை

நடிப்பு – அஜித், ஷ்ரத்தா, அபிராமி
இயக்கம் – வினோத்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி – 8 ஆகஸ்ட் 2019
டிரைலர் வெளியான தேதி – 12 ஜுன் 2019
பார்வைகள் – 1.70 கோடி
லைக்குகள் – 8.5 லட்சம்

7.சாஹோ

நடிப்பு – பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்
இயக்கம் – சுஜித்
இசை – ஜிப்ரான்
வெளியான தேதி – 30 ஆகஸ்ட் 2019
டிரைலர் வெளியான தேதி – 10 ஆகஸ்ட் 2019
பார்வைகள் – 1.32 கோடி
லைக்குகள் – 1.62 லட்சம்

8.என்ஜிகே

நடிப்பு – சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர்
இயக்கம் – செல்வராகவன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி – 31 மே 2019
டிரைலர் வெளியான தேதி – 29 ஏப்ரல் 2019
பார்வைகள் – 1.25 கோடி
லைக்குகள் – 4.78 லட்சம்

9.கோமாளி

நடிப்பு – ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு
இயக்கம் – பிரதீப் ரங்கநாதன்
இசை – ஹிப்ஹாப் தமிழா
வெளியான தேதி – 15 ஆகஸ்ட் 2019
டிரைலர் வெளியான தேதி – 3 ஆகஸ்ட் 2019
பார்வைகள் – 1.19 கோடி
லைக்குகள் – 3.88 லட்சம்

10.கடாரம் கொண்டான்

நடிப்பு – விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன்
இயக்கம் – ராஜேஷ் எம் செல்வா
இசை – ஜிப்ரான்
வெளியான தேதி – 19 ஜுலை 2019
டிரைலர் வெளியான தேதி – 3 ஜுலை 2019
பார்வைகள் – 1.15 கோடி
லைக்குகள் – 2.61 லட்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*