ஆண்களுக்கு நிகராக சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் கதாநாயகிகள்!

பொங்கலிற்கு வெளிவந்த பட்டாஸ் திரைப்படத்தில் பழங்கால தமிழகர்களின் தற்காப்பு கலையான அடிமுறை பயிற்சியை முறைப்படி பயின்ற சினேகா, வில்லன்களுடன் சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

பட்டாஸ் படத்திற்காக சினேகா எப்படி அடிமுறை பயிற்சி பெற்றார் என்ற வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதேபோல் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனனும் சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

குறிப்பாக படத்தின் மாளவிகா மோகனன் வில்லனான விஜய் சேதுபதியுடன் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலாபால் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் அமலா பால் க்ராவ் மகா என்ற சண்டை பயிற்சியை முறைப்படி பயின்று, அதிரடி சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல், மிகவும் கடினமான காட்சிகளில் கூட உயிரை பயணம் வைத்து அமலாபால் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் சினிமாவில் கதாநாயகிகள் தொடர்பில் இருந்து வந்த எண்ணப்பாடு மலையேறி கதையை சரியாக தேர்வு செய்துவருகின்றனர்.

இந்த சமயத்தில் கொலிவூட் படங்களைப் போல கதாநாயகர்களுக்கு நிகராக கதாநாயகிகளும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*