90 வயதைத் தொட்ட இயக்குனர் கே.விஸ்வநாத்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் முக்கியமானவர் கே.விஸ்வநாத். தெலுங்குத் திரையுலகத்தில் பல அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியவர். “சங்கராபரணம், சாகரசங்கமம், ஸ்ரீவெண்ணிலா, ஸ்வாதிமுத்யம், சூத்ரதாரலு, ஸ்வராபிஷேகம்’ என இவருடைய பல படங்கள் காலத்தைக் கடந்தும் சினிமா ரசிகர்களால் பாராட்டப்படுபவை.

1960களின் மத்தியில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1979ல் வெளிவந்த ‘சங்கராபரணம்’ படம் தெலுங்கு சினிமாவை இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் உயர்த்தியது. அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘சாகர சங்கமம்’ படம் ‘சலங்கை ஒலி’ என்ற பெயரிலும், ‘ஸ்வாதி முத்யம்’ படம் ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரிலும் தமிழில் வெளியாகி இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்தார். ‘யாரடி நீ மோகினி, ராஜபாட்டை’ ஆகிய படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் பேசப்பட்டவை. பல வருடங்களாக சென்னையில் வசித்தவர் சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்திற்கு குடி பெயர்ந்தார். நேற்று தன்னுடைய 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார் கே. விஸ்வநாத். அவருக்கு தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*