‘மாஸ்டர்’ – இசை வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் தான் நடக்க வேண்டி உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு முன்னதாக விஜய்யின் முந்தைய படங்களைப் போல பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவையும் நடத்த உள்ளார்களாம்.

சமீபத்தில் விஜய்யின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததையடுத்து அது அரசியல் வட்டாரங்களிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது குறித்து விஜய் இதுவரை எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டின் போது விஜய்யின் பேச்சில் அந்த விஷயங்களும் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ‘பிகில்’ படத்தின் இசை வெளியீடே சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டிற்கு அரசு தரப்பில் அனுமதி கொடுப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*