இரண்டாவது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு

தெலுங்கு திரையுலகில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. பெரிய ஹீரோக்களின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றவர் இவர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி ஹார்ட் அட்டாக்கில் மரணமடைந்தார். இந்த நிலையில் தற்போது 49 வயதான தில் ராஜு, 30 வயதான பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

சினிமாவிற்கு சற்றும் தொடர்பில்லாத குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ள தில் ராஜு, இந்த திருமணத்தை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக நடத்தியுள்ளாராம். ஆனால் தில் ராஜு தரப்பிலோ தனது திருமணம் பற்றிய செய்தியை அவரே முறைபடி அறிவிப்பார் என்றும், இதில் ரகசியம் எதுவும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது..

சமீபத்தில் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெளியான ஜானு, இவரது தயாரிப்பு தான்.. அதுமட்டுமல்ல இந்தி பிங்க் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படத்தையும் இவர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*